ஈரான் விமான விபத்தில் 180 பேர் பலி: அமெரிக்கா சதியா?

44400e7530831045033fd88745fd8bdf

ஈரானில் இருந்து கிளம்பிய உக்ரைன் நாட்டின் பயணிகள் விமானம் ஒன்று 180 பயணிகளுடன் விபத்துக்குள்ளான அதிர்ச்சி தகவல் சற்று முன்னர் வெளிவந்த நிலையில் அந்த விமானத்தில் பயணம் செய்த 180 பேரும் பலியாகி உள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது

இதுகுறித்து ஈரான் அதிகாரிகள் தெரிவித்த போது ’ஈரான் தலைநகர் டெஹ்ரான் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விமானம் தனது தொடர்பை இழந்து விபத்துக்குள்ளானதோடு, இந்த விமானத்தில் பயணம் செய்த 180 பயணிகளும் பலியாகி உள்ளனர்’ என்று தெரிவித்துள்ளனர்.

மேஉம் விமானத்தின் சிதறிய பாகங்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் இந்த விமான விபத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது

இன்று காலை ஈராக்கில் உள்ள அமெரிக்க விமான தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களுக்கு பின்னரே இந்த விமான விபத்து ஏற்பட்டுள்ளது என்பதும், அதேபோல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்கள் தனது டுவிட்டரில் ’ஆல் இஸ் வெல்’ என்று டுவிட் செய்த சில நிமிடங்களில் இந்த விமான விபத்து நடந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த விமான விபத்துக்க்கும், அமெரிக்காவுக்கும் சம்பந்தம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது

இருப்பினும் முதல்கட்ட தகவலின் அடிப்படையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாகத்தான் இந்த விமான விபத்து ஏற்பட்டு இருப்பதாக ஈரான் நாட்டு விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

 

Related Articles

Next Story