ஈரானில் விமான விபத்து: 180 பயணிகளின் கதி என்ன?

53a857a25c83284dfc21795ae82e0b40-1

அமெரிக்க படையின் தாக்குதலால் ஈரானின் முக்கிய தளபதி சுலைமானி கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து இன்று அதிகாலை ஈரானின் அதிரடி தாக்குதல் அமெரிக்கா-ஈராக் கூட்டுப்படையின் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இரு நாடுகளுக்கிடையே போர் மூளும் அபாய சூழ்நிலை உள்ள நிலையில் சற்று முன்னர் ஈரானில் இருந்து 180 பயணிகளுடன் கிளம்பிய விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விமான விபத்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டதாக கூறப்படினும் இந்த விமானம் தாக்குதலால் விபத்து ஏற்பட்டதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து உக்ரைன் நாட்டு விமானம் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களில் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணம் செய்த 180 பயணிகளின் நிலை குறித்து எந்தவித தகவலும் வெளிவரவில்லை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஈரான் அமெரிக்கா இடையே போர் பதட்டம் நிலவி வரும் நிலையில் இந்த விமான விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் சற்றுமுன்னர் தனது டுவிட்டரில் ‘ஆல் இஸ் வெல்’, எல்லாம் நன்மைக்கே என டுவீட் செய்த சில நிமிடங்களில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

Related Articles

Next Story