19 வயது பெண் செய்த தில்லு முல்லு – போலிஸில் சிக்கிய பின் கண்ணீர் !

Published on: January 3, 2020
---Advertisement---

8aa1351ea4df2ffbe9089e699d649409

சென்னையில் பைக் திருட முயன்ற இரு பெண்களில் ஒருவர் சிக்கியதை அடுத்து செலவுக்கு காசு இல்லாததால் இப்படி செய்ததாக ஒத்துக்கொண்டுள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணியில் வசித்து வருபவர் யாசர் அராபத். இவர் வழக்கம் போல தனது பைக்கை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். அப்போது வீட்டுக்கு வெளியே உள்ள சிசிடிவி காட்சிகளில் இரு பெண்கள் சந்தேகப்படும் விதமாக தனது பைக் அருகே நின்று, கள்ளச்சாவி போட்டு பைக்கைத் திருட முயன்றுள்ளனர்.

இதையடுத்து வெளியே சென்று அவர்களைப் பிடிக்க முயல இரு பெண்களில் ஒருவர் தப்பித்துவிட, மற்றொருவர் மாட்டிக்கொண்டுள்ளார். அவரை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளார். விசாரணையில் அவர்,  திருவல்லிக்கேணி ஜாம்பஜார் பகுதியை சேர்ந்த  19 வயது சந்தியா என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தப்பித்து சென்றவர் மோனிஷா ஆவார்.

தோழிகளான இவர்கள் கை செலவுக்கு காசு இல்லாததால் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக பைக் திருட முயன்றதாக கண்ணீரோடு தெரிவித்துள்ளார். தலைமறைவான மனிஷாவைப் போலிஸார் தேடி வருகின்றனர்.

Leave a Comment