நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா காதலில் விழுந்ததும், திரைப்பட விழாக்கள் என்றாலும் சரி, வெளிநாட்டுப்பயணம் என்றாலும் சரி இருவரும் ஜோடி போட்டு செல்ல துவங்கினர். இது தொடர்பான பல புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், ஜீ தொலைக்காட்சி நடத்திய விழாவில் நடிகை நயன்தாராவுக்கு பிகில், விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்ததற்காக மறைந்த நடிகை ஸ்ரீதேவி பெயரில் 2 விருதுகள் வழங்கப்பட்டது. எப்போதும், இது போன்ற விழாக்களுக்கு விக்னேஷ் சிவனுடன் வரும் நயன்தாரா இந்த முறை தனியாக வந்திருந்தார். இதுபற்றி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மறைமுகமாக கேட்டும் அவர் அதற்கு பதில் கூறவில்லை.
நயன்தாரா தனியாக வந்த இந்த சம்பவம் திரைத்துறையில் பலருக்கும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
1960களில் தமிழகத்தின்…
ஜனநாயகன் திரைப்படம்…
நலன் குமாரசாமி…
விஜய் டிவியில்…
பார்க்கிங் திரைப்படம்…