சைக்கோ படத்தின் 2 முக்கிய கேள்விகள் – மிஷ்கினின் பதில் இதுதான்!

Published on: January 28, 2020
---Advertisement---

e2bef5e62a243215d99d4ae873a3e2b0-2

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் சைக்கோ. இப்படத்தை பார்த்த பலரும் படத்தில் லாஜிக் ஓட்டை அதிகமாக இருக்கிறது. கொலைகாரன் கொலை செய்யும் ஒரு இடத்தில் கூடவா சிசிடிவி கேமாரா இருக்காது. கண் தெரியாத உதயநிதி அவனை கண்டுபிடிக்கும் போது போலீசார் ஏன் அவனை கண்டுபிடிக்காமல் உள்ளனர் என பல கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில், ஒரு இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இது பற்றி விளக்கமளித்துள்ளார்.

திரைப்படங்களை பேரன்போடு பாருங்கள். உங்களுக்குள் ஒரு இயக்குனரை வைத்துக்கொண்டு என் படத்தை பார்க்கக் கூடாது.  சிசிடிவி கேமரா இல்லாத இடத்தில் அவன் கொலை செய்திருக்கலாம். அந்த இடத்தை அவன் தேர்ந்தெடுத்திருக்கலாம் அதையெல்லாம் காட்டினால் போராடித்து விடும்.

அதேபோல், போலீசை டம்மியாக காட்டியிருக்கிறேன் எனக்கூறுகிறார்கள். சைக்கோ கொலைகாரனை கண் தெரியாத என் ஹீரோதான் கண்டுபிடிக்கிறான் என்பதுதான் கதை. எனவே, போலீசை டம்மியாகத்தான் காட்ட வேண்டும். அதோடு, இதுவரை கண்டுபிடிக்கவே முடியாத கொலைகள் உலகம் முழுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே, மூளையை கழட்டி வைத்து விட்டு திரைப்படங்களை பாருங்கள். ரசியுங்கள். ஆராய்ச்சி செய்யாதீர்கள். அப்படி செய்தால் உங்கள் திரைப்படங்களை ரசிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

adminram

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.