More

ஊரடங்கை மீறி வெளியே வந்தால் 2 ஆண்டு சிறை – மத்திய அரசு அதிரடி

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41லிருந்து 50ஆக அதிகரித்துள்ளது. எனவே, போலீசார் தங்கள் கெடுபிடிகளை அதிகப்படுத்தியுள்ளனர். 

Advertising
Advertising

ஆனாலும், பலரும் அதை மதிக்காமல் இருசக்கர வாகனம் மற்றும் கார் போன்ற வாகனங்களில் வெளியே வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதில் சிலருக்கு தடியடி கிடைக்கிறது. சிலர் எச்சரித்து அனுப்பப்படுகின்றனர். சிலர் மீது வழக்கும் பதிவு செய்யப்படுகிறது.

இந்நிலையில், 144 தடை உத்தரவை மீறி வெளியே வருபவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. எனவே, இது விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
adminram