ஹர்திக் பாண்ட்யா உள்ளூர் தொடர் ஒன்றில் 55 பந்துகளில் 158 ரன்கள் சேர்த்து தேர்வுக்குழுவினரின் கவனத்தைத் தன்பக்கம் திருப்பியுள்ளார்.
இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா 5 மாதங்களுக்கு முன்னதாக முதுகு வலி பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வில் இருந்தார். அதன் பின் இந்திய அணியில் தேர்வு பெற சோதனைகளில் ஈடுபட்ட போது அவர் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பும் பொருட்டு பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.
அதையடுத்து இப்போது நடந்துவரும் பாட்டில் தொடரில் மும்பையின் ரிலையன்ஸ் 1 அணிக்காக விளையாடி வருகிறார். இதில் ஏறகனவே ஒரு போட்டியில் வெறும் 37 பந்துகளில் அதிரடியாக சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக விளாசி தனது திறமையை தேர்வுக்குழு தலைவர்களுக்குக் காட்டினார். இதையடுத்து இப்போது மீண்டும் பாரத் பெட்ரோலியம் அணிக்கு எதிராக 55 பந்துகளில் 158 ரன்கள் ஆட்டமிழக்காமல் சேர்த்துள்ளார். அவரது இந்த அதிரடி சதத்தில் 20 சிக்ஸர்களும் 6 பவுண்டரிகளும் அடக்கம்.
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…