2020 போராட்ட ஆண்டாகத் துவங்கும்: ஹெச். ராஜா ஆவேசம்

Published On: December 31, 2019
---Advertisement---

f90f6166a4cadf7069f63871a3573dab

2019ஆம் ஆண்டு நடந்த குற்றத்திற்கு 2019 ஆண்டிலேயே நடவடிக்கை தேவை என்றும், இல்லையெனில் 2020ஆம் ஆண்டு போராட்ட ஆண்டாகத் துவங்கும் என்றும் ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ஆவேசமாக கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சமீபத்தில் முஸ்லீம் அமைப்பு ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் நெல்லை கண்ணன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து அவர் மீது காவல்நிலையத்தில் புகார்கள் குவிந்தனர்.

நெல்லை கண்ணன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக சார்பில் கவர்னரிடமும் மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து ஹெச்.ராஜா தனது டுவிட்டரில், ‘2019ல் நடந்த குற்றத்திற்கு 2019 திலேயே நடவடிக்கை தேவை. இல்லையெனில் 2020 போராட்ட ஆண்டாகத் துவங்கும் என்றும், நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி 1.1.2020 மாலை 3.00 மணிக்கு மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே எல்.கணேசன், பொன்னார், சிபிஆர் ஆகியோர்களுடன் நானும் போராட்டம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார். மேலும் நெல்லை கண்ணன் மட்டுமின்றி சீமானும் கைது செய்யப்பட வேண்டும் என்று ஹெச்.ராஜா கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இன்று இரவு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக விடிய விடிய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவிருக்கும் நிலையில் நாளை மதியம் 3 மணிக்கு போராட்டம் என பாஜக அறிவித்துள்ளது காவல்துறையினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Comment