24 வருடம் ஆனாலும் மாறாத ஒரே விஷயம்… ரசிகரின் அன்பளிப்பைப் பகிர்ந்த சிம்ரன்!

நடிகை சிம்ரன் தனக்கு ரசிகர் ஒருவர் அனுப்பிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

நடிகை 1995 ஆம் ஆண்டு நேருக்கு நேர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக மாறி தமிழ், தெலுங்கு என பலமொழிகளில் ஒரு ரௌண்ட் வந்தார். அவரது வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுவது அவரது கவர்ச்சி மற்றும் நடனம். இந்நிலையில் திருமணத்துக்குப் பின் சினிமாவில் இருந்து விலகிய சிம்ரன் தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பகிர்ந்துள்ள அவர் 24 வருடங்களில் மாறாததது நான் நடனத்தின் மேல் கொண்டுள்ள காதல்தான் எனத் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் சிம்ரன் நடனமாடும் பல பிரபல பாடல் காட்சிகளின் தொகுப்பு இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவை ரசிகர் ஒருவர் தனக்கு அனுப்பியதாகவும் சொல்லியுள்ளார்.

Published by
adminram