அமீரகத்தில் நடக்க இருக்கும் ஐபில் 2020 தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த 29 வீரர்கள் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
மார்ச் மாதமே நடக்க இருந்த ஐபில் 2020 போட்டித் தொடர் கொரோனா பரவலால் ஒரு வழியாக செப்டம்பர் 19 ஆம் தேதி அமீரகத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இதற்காக 8 அணிகளும் தங்கள் வீரர்களை எல்லாம் பயிற்சி அளித்து அமீரகம் அனுப்ப தயாராக உள்ளனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஐபிஎல் தொடரின் முதல் பாதி முழுவதும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளைச் சேர்ந்த 29 வீரர்கள் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது. இவ்விரு அணிகளின் வீரர்களும் ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய பங்களிப்பு செலுத்துபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏனென்றால் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே செப்டம்பர் 4 ஆம் தேதி தொடங்கும் தொடருக்காக ஆஸ்திரேலிய வீரர்கள் இங்கிலாந்துக்கு செல்ல உள்ளனர். அந்த தொடரை முடித்து அவர்கள் வர அக்டோபர் மாதம் ஆகிவிடும் என்பதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தளபதி 69…
சூர்யா அடுத்து…
சர்தார் 2…
தனுஷ், ஐஸ்வர்யா…
துல்கர் சல்மான்…