இப்படி சொதப்பிட்டாரே இந்தியன் தாத்தா... 2k-கிட்ஸால் வந்த வினை... இனி அவங்க மனசுவச்சா மட்டும் தான் தேறும்!...
இயக்குனர் சங்கர் கமலஹாசன் கூட்டணியில் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படம் இந்தியன். இந்த திரைப்படம் கமலஹாசனுக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. மேலும் இயக்குனர் சங்கருக்கும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்திருந்தது. இதனால் இந்தியன் டு திரைப்படத்தை எடுப்பதற்கு முயற்சி மேற்கொண்டார் ஷங்கர்.
படம் தொடங்கிய முதலே பல சர்ச்சைகளை எதிர்கொண்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக இப்படத்தை எடுத்து முடிப்பதற்கு மூன்று ஆண்டு காலமானது. இருப்பினும் இந்த திரைப்படம் கடந்த ஜூலை 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தில் கமலஹாசன் உடன் இணைந்து சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரகனி, பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
முதல் நாள் நல்ல வரவேற்பை பெற்றாலும் விமர்சன ரீதியாக சற்று அடி வாங்கியது. விக்ரம் திரைப்படத்தைப் போலவே படத்தின் முதலில் கமலஹாசனை காட்டி விட்டு அதன் பிறகு இடைவெளியில் அவரது என்ட்ரி கொடுப்பது போன்று தான் இந்தியன் 2 படத்திலும் காட்சிகள் இடம் பெற்று இருந்தது. முதல் பாதி அந்த அளவுக்கு ரசிகர்களை ஈர்க்கவில்லை.
இரண்டாம் பாதி மட்டுமே மக்களிடையே சற்று வரவேற்பை கொடுத்திருந்தது. ஊழல் பற்றிய படம் என்பதால் 2கே கிட்ஸ்களுக்கு இந்த திரைப்படம் கிரிஞ்சாக தெரிகின்றது. இதனால் சமூக வலைதள பக்கங்களில் இப்படம் தொடர்பாக தொடர்ந்து நெகடிவ் கமெண்ட்களையே அவர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
2k கிட்ஸ்-களின் ஆதரவை இந்த திரைப்படம் பெற தவறிவிட்டது. ஆனால் குடும்ப ஆடியன்ஸ்களுக்கு இந்த திரைப்படம் மிகவும் பிடித்த வகையில் இருக்கும் என்று கூறப்படுகின்றது. இனி அவர்கள் கையில் தான் இருக்கின்றது. ஆரம்பத்தில் சில படங்கள் விமர்சன ரீதியாக பாதிக்கப்பட்டாலும் பின்னர் ஒரு சில நாட்கள் கழித்து பிக்கப் ஆகிவிடும்.
அதுபோல இந்த திரைப்படமும் பிக்கப்பாக வாய்ப்பிருக்கின்றது என கூறியிருக்கின்றார் வலைப்பேச்சு அந்தணன். மேலும் இந்த திரைப்படத்தில் 20 நிமிடத்தை குறைப்பதற்கு சங்கர் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது.