மயிலாடுதுறை அருகே ஒரு கல்லூரி மாணவருடன் 3 கல்லூரி மாணவிகள் மது அருந்திய வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலானதை அடுத்து கல்லூரி நிர்வாகம் நால்வரையும் டிஸ்மிஸ் செய்து உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மயிலாடுதுறை அருகே தருமபுரம் என்ற பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஒரு கல்லூரி மாணவரும், 3 கல்லூரி மாணவிகளும் கல்லூரி சீருடை அணிந்து ஒன்றாக உட்கார்ந்து மது அருந்தி பேசிக்கொண்டிருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலானது
இதனை அடுத்து கல்லூரி நிர்வாகத்துக்கு வந்த புகாரை அடுத்து கல்லூரி நிர்வாகம் உடனடியாக அந்த மாணவரையும் அவருடன் மது அருந்திய 3 மாணவிகளையும் டிஸ்மிஸ் செய்வதாக அறிவித்தது
கல்லூரி நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கை மற்றும் மது அருந்திய வீடியோ வைரலான அவமானத்தையும் தாங்க முடியாமல் ஒரு மாணவி தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மாணவ மாணவிகள் கல்லூரி பருவத்தில் மது அருந்தும் பழக்கம் அதிகமாகி வருவது கலாச்சார சீர்கேடு என்று சமூக ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்
சினிமாவில் நடிக்க…
பழம்பெரும் நடிகை…
1960 காலகட்டங்களில்…
தமிழ் சினிமாவில்…
கோட் திரைப்படத்திற்குப்…