சம்பள விஷயத்தில் மோதும் 3 முக்கிய பிரபலங்கள் - அடிச்சு காட்டுங்க அதிகமா தறோம் எனும் TVகள்!
ஒரு காலத்தில் வீட்டில் இருக்கும் அம்மா மற்றும் பாட்டியை தவிர பெரும்பாலும் மற்றவர்கள் தொலைக்காட்சி பார்ப்பதே மிகவும் குறைவு தான். பெரும்பாலான வீடுகளில் எப்போதும் சீரியல்களே ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் தற்போது பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை எல்லோரையும் டிவி முன் அமரவைத்துள்ளது பல ரியாலிட்டி ஷோக்கள்.
அந்த வகையில் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க மிகப்பெரிய அளவில் மக்களை சென்றடைந்து ஹிட் ஆனது. 5 வது சீனனுக்காக நிகழ்ச்சியின் ஒரு நாள் ஷூட்டிற்காக கமலுக்கு மட்டும் ரூ. 4 கோடி சம்பளம். மொத்தம் 15 நாள் ஷூட்டிங்கிற்கு 60 கோடி சம்பளம் வாங்குகிறாராம் கமல்.
அதே போல் சன் டிவியில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் ஒரு எபிசோடு வெறும் 50 லட்சம் சம்பளம் வழங்கப்டுகிறதாம். இதில் விஜய் சேதுபதி ஏற்கனவே 15 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதால் அவரது சம்பளம் குறைவு என தகவல்கள் கூறுகிறது.
அதற்கு அடுத்ததாக நடிகர் அர்ஜுன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் SURVIVOR நிகழ்ச்சிக்காக மொத்தமாக ரூ. 5 கோடி சம்பளம் கொடுக்கட்டுள்ளதாம். இந்த நிகழ்ச்சி ஹிட் அடித்தால் சம்பளம் ஏற்றி தருவதாக உறுதியளித்துள்ளதாம் டிவி நிர்வாகம். இவர்களில் கமலுக்கு தான் அதிக சம்பளம் ஆனால், கூடிய சீக்கிரத்தில் அர்ஜுன் கமலை முந்திவிடுவார் என்கிறது தொலைக்காட்சி ரசிகர்கள் வட்டராம்.