More

3 மாதங்களுக்கு ரூ. 500  ; ஒரு கிலோ பருப்பு இலவசம்  : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

இன்று செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார்.

Advertising
Advertising

இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மத்திய அரசு முன்வந்துள்ளது. இதற்காக ரூ. 1.70 லட்சம் கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு உதவிகள் வழங்கப்படும்.

மேலும், 20 கோடி பெண்களுக்கு ஜன்தன் வங்கி கணக்குகளின் கீழ் 3 மாதங்களுக்கு ரூ.500 வழங்கப்படும். ஒரு வீட்டுக்கு ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம், உணவில்லாமல் யாரும் பாதிக்கப்படாத நிலை ஏற்படும். இந்த திட்டங்களின் அடிப்படையில், பொருட்கள் 2 தவணையாக வழங்கப்படும்

விதவைகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும்.

கொரோனாவுக்கு எதிராக போரிடும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு ரூ.50 லட்சம் அளவிற்கு மருத்துவ காப்பீடு எடுக்கப்படும்

பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின்கீழ், ஒவ்வொரு மாதாமும் 5 கிலோ அரிசி மற்றும் 5 கிலோ கோதுமை ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த 3 மாதங்களுக்கு அரிசி அல்லது கோதுமை என அவர்கள் எதை வாங்கினாலும், கூடுதலாக 5 கிலோ அரிசி அல்லது கோதுமை விருப்பத்தை பொறுத்து இலவசமாக வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Published by
adminram