பீஸ்ட் படத்தில் மிரட்டலான 3 வில்லன்கள்.. யார் யார் தெரியுமா?....

by adminram |

7e07f38b0dc4c7229ab8b34d7f3af13f

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற்றது. அதன்பின் 2ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இதில், விஜய் - பூஜா ஹெக்டே இடையேயான பாடல் காட்சி படம்பிடிக்கப்பட்டது. அடுத்த கட்டப்படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெறவதாக கூறப்பட்டது. ஆனால், அது தற்போது மாற்றப்பட்டு சென்னையில் 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. இதில் பரபர ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்படவுள்ளது. 2022 கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட வேண்டும் என படக்குழு வேகமாக இயங்கி வருகிறது

069d28ce375c97d5c3f7d6ca980cc93a

இந்நிலையில், இப்படத்தில் 3 வில்லன்களுடன் விஜய் மோதவுள்ளாராம். அதில் ஒருவர் மலையாள நடிகர் சைன் டாம் சாக்கோ. இவர் மலையாளத்தில் மிரட்டலான கதாபத்திரங்களில் நடித்தவர்.

be7976925090f3be3687d2fd9f24c519

அடுத்து, சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் டான்சிங் ரோஸாக வந்து ரசிகர்களை கவர்ந்த ஷபீர் கல்லாரக்கல், அடுத்து நமக்கு மிகவும் தெரிந்த தமிழ் பட இயக்குனர் செல்வராகவன். இவர்கள் மூவருடன்தான் விஜய் மோதவுள்ளார்.

6f683b9c0929350b598477913f3dc67e-2

Next Story