கடந்த 2007ம் ஆண்டு வெளியான “கற்றது தமிழ்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி. ராம் இயக்கியிருந்த அந்த படம் அஞ்சலிக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கொடுத்தது. அந்த படத்தில் மிகச்சிறந்த நடிகையாக ஃபிலிம் ஃபேர் விருது இவருக்கு அறிவிக்கப்பட்டது.
அந்த வெற்றியை அடுத்து கடந்த 2010ல் வசந்த பாலன் இயக்கத்தில் வெளிவந்த “அங்காடி தெரு” படத்தில் நடித்த அஞ்சலி தனக்கான தனி பிம்பத்தை உருவாக்கிக்கொண்டார். அதற்காக சிறந்த நடிகை ஃபிலிம்ஃபேர் விருதை தட்டிச்சென்றார். தொடர்ந்து எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி உள்ளிட்ட பல படங்களில் வித்யாசமான கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.
பின்னர் எங்கேயும் எப்போதும் படத்தில் தன்னுடன் நடித்த நடிகர் ஜெய்யுடன் காதல் வலையில் விழுந்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டார். அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் அரை டசன் படங்களை கையில் வைத்துள்ள அஞ்சலி இது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் வீட்டிலே பொழுதை கழித்து வருவதுடன் அவ்வப்போது நாய்குட்டியுடன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்ப்போது பதிவிட்டுள்ள அஞ்சலியை அவரது ரசிகர்கள் “34 வயசுல எப்படி சின்ன பாப்பா மாதிரியே இருக்கீங்க? என வியப்புடன் கேட்டு வருகின்றனர்.
Sorgavaasal: ஆர்.ஜே.பாலாஜியின்…
Vidamuyarchi: நேற்று…
பாலா இயக்கிய…
சினிமாவில் ஒரு…
லைகா நிறுவனத்தின்…