சிவாஜியைப் பின்னுக்குத் தள்ளவே இந்தப் படங்களில் எல்லாம் நடித்தாரா உலகநாயகன்?
பல தயாரிப்பாளர், எழுத்தாளர், இயக்குனர் என பன்முகத்திறன் கொண்டவர் ராசி அழகப்பன். அபூர்வ சகோதரர்கள் படத்தின் துணை இயக்குனர் இவர் தான். அந்த வெற்றியைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், குணா, மகளிர் மட்டும், தேவர் மகன், விருமான்டி போன்ற படங்களிலும் கமலுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்
இவர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் சிவாஜியின் படங்களுடன் கமல் படங்களை ஒப்பிட்டு ஒரு படி மிஞ்சிய கமல் என பேசியுள்ளார். இதுகுறித்து அவர் என்னென்ன சொல்றாருன்னு பார்ப்போமா...
சிவாஜியைப் பொருத்தவரை நடிப்பில் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. உலகளவில் மார்லன் பிராண்டோவை சொல்வார்கள். ஆனால் அவரை விட அதிகப்படியாக கேரக்டர்களில் நடித்து அசத்தியவர் தான் நடிகர் திலகம்.
அந்த வகையில் சிவாஜி கணேசன் முற்றிலும் மாறுபட்ட 3 வேடங்களில் நடித்த படம் தெய்வமகன். இதில் தந்தை, மகன், கோரமான முகத்துடன் ஒரு மகன் என 3 வேடங்களில் ஒன்றுக்கொன்று ரொம்பவே வித்தியாசம் காட்டி நடித்து அசத்தியிருப்பார் சிவாஜி.
தந்தை அவருக்கே உரிய கம்பீரத்தோடும், மகன் பணக்கார வீட்டுப் பிள்ளையாகவும், இன்னொரு மகன் பாசத்துக்காக ஏங்கித் தவிக்கும் கோர முகத்துடனும் நடித்து அனைவரையும் அசர வைத்திருப்பார். சிவாஜியின் மடியிலேயே வளர்ந்து வந்தவர் தான் கமல்.
அப்படி இருக்கும்போது அவருக்கு நடிப்பு வராமலா இருக்கும்? அவரும் படிப்படியாக பல வேடங்களில் வித்தியாசம் காட்டி நடிக்க ஆரம்பித்தார். சிவாஜி 3 வேடங்களில் நடித்தார் என்றால் இவர் 4 வேடங்களில் நடித்தார். அது தான் மைக்கேல் மதன காம ராஜன்.
ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட கேரக்டர்கள். நால்வரும் ஒரே நேரத்தில் படத்தில் வந்து அசத்துவார்கள். அதேபோல சிவாஜி நவராத்திரி படத்தில் 9 வேடத்தில் நடித்து இருந்தாரே என்று பலரும் சொல்ல, கமலும் தசாவதாரம் படத்தில் 10 வேடத்தில் நடித்து அசத்தினார்.
கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில் உருவான இந்தப் படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. சிவாஜி 9 தானே... நான் 10ன்னு ரெக்கார்டை பிரேக் பண்ணிட்டு அமைதியா இருந்தாரு கமல். அது தமிழ்த்திரை உலகுக்கே பெருமை தான்.
Also Read: மோகன் வந்ததும் தப்பிச்சி ஓடி வந்துட்டேன்!.. கவனமா இருங்க!. நடிகரிடம் சொன்ன கமல்ஹாசன்!..
குட்டி 16 அடி பாயும்ல. அம்மா எட்டடி தான. இது தான் தமிழ்சினிமாவுல ஒருத்தரை ஒருத்தர் மிஞ்சிக்கிட்டே போகறது. மேக்கப்புலயும் இந்தியன் 2ல எல்லாத்தையும் மிஞ்சிட்டாரு. நாயகன் படத்துலயே மேக்கப்ல அசத்தினார் கமல். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.