ஜெயம் ரவி தாங்க முடியாம எடுத்த முடிவுதான் இது!... இவ்வளவு இருக்குமா புடிச்சா கடைசியில் அந்துதானே போகும்..

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் ஜெயம் ரவி. தனது அண்ணன் இயக்கத்தில் உருவான முதல் படமே மிகப்பெரிய ஹிட் கொடுக்க அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி நடிக்க தொடங்கினார். இவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான திரைப்படங்கள் அனைத்துமே அவரது அண்ணன் ராஜா இயக்கும் படங்களாகவே அமைந்தது.

இதனால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இருப்பினும் லவ் பாயாக வலம் வந்த ஜெயம் ரவி பின்னர் ஆக்சன் ஹீரோவாக மாறத் தொடங்கினார். பேராண்மை திரைப்படத்தில் பழங்குடியினரை சேர்ந்த இளைஞனாக நடித்து அசத்தி இருப்பார். அந்த படத்தில் தேவையான அளவு ஆக்சன் காட்சிகளில் நடித்து மிரள வைத்தார்.

அதைத்தொடர்ந்து தனி ஒருவன் திரைப்படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருந்த ஜெயம் ரவி அந்தப் படத்திலும் ஆக்சன் காட்சிகளில் பின்னி பெடல் எடுத்தார் .இந்த படம் அவருக்கு பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை தொடர்ந்து பெரிய படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தன. பெரும்பாலும் தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் ஜெயம்ரவி.

கடைசியாக மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். அதனை தொடர்ந்து வெளியான அகிலன், சைரன் உள்ளிட்ட திரைப்படங்கள் படுதோல்வியை சந்தித்தது. இதனால் சற்று விரக்தியில் இருக்கின்றார் ஜெயம் ரவி. இவர் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சமீபகாலமாக இவர்கள் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து தகவல் வெளியாகி வருகின்றது. அதற்கு ஏற்ற வகையில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த ஜெயம் ரவியின் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி இருக்கின்றார்.

மேலும் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி அதிக சந்தேக புத்தி உடையவராம். ஜெயம் ரவி யாருடையாவது பேசினால் கூட அவர் ஏன் எதற்கு என்று அவ்வளவு கேள்வி கேட்பார்களாம். இது குறித்து பேசி அந்தணன் தெரிவித்திருந்ததாவது ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியின் சந்தேக புத்தி தான் ஜெயம் ரவி இப்படி ஒரு முடிவு எடுக்க காரணமாக அமைந்தது.

ஒருவரை கட்டி பிடிக்கலாம் ஆனால் எலும்பு நொறுங்கும் அளவுக்கு கட்டி பிடித்தால் அவரும் எப்படி தாங்குவார். அது மட்டும் இல்லாமல் சமீப நாட்களாக அவர் தனியாக வாழ்ந்து வருகிறார். மனைவி வீட்டுக்கும் செல்லாமல் பெற்றோர் வீட்டுக்கும் செல்லாமல் தனியாக வசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது. ஜெயம் ரவி தனது மனைவியுடன் இனி சேர்ந்து வாழ்வதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறி வருகிறார்கள். ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக இவர்கள் தங்களது விவாகரத்தை அறிவிக்கவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

Next Story