இது ஃபேமிலி டைம்!.. மனைவி, மகன், மகளுடன் செம வைப் பண்ணும் நம்ம மகாராஜா... வைரலாகும் கிளிக்ஸ்..!

by ராம் சுதன் |

ஹீரோவாக, காமெடியனாக, வில்லனாக என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக பொருந்தக்கூடிய ஒரு நபர் விஜய் சேதுபதி. தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கால் பதித்த இவர் அடுத்தடுத்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கின்றார். பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரவுடிதான், சேதுபதி,96, விக்ரம் வேதா உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்து இருந்தது.

நடிகராக மட்டுமில்லாமல் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து அசதி வந்த இவர் பேட்ட, மாஸ்டர், விக்ரம், ஜவான் என அடுத்தடுத்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிகச் சிறந்த நடிகராக வலம் வந்தார். ஹீரோவாக இவரை ரசித்ததை காட்டிலும் வில்லனாக பலரும் ரசிக்க தொடங்கினார்கள்.

ஜவான் திரைப்படத்திற்கு பிறகு இனி வில்லனாக நடிக்க மாட்டேன் என்று முடிவு எடுத்த விஜய் சேதுபதி கம்பேக் கொடுத்த திரைப்படம் தான் மகாராஜா. இவரின் 50வது திரைப்படமாக உருவான இந்த திரைப்படத்தை நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்தார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

100 கோடி வசூல் செய்த இந்த திரைப்படம் தற்போது போட்டியில் netflix தளத்திலும் வெளியாகி இருக்கின்றது. இவர் குடும்ப வாழ்க்கையை பொருத்தவரையில் கடந்த 2003 ஆம் ஆண்டு ஜெஸ்ஸி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றார்.

மகன் சூர்யா தற்போது ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கின்றார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கின்றது. இவர் தனது தந்தையைப் போல நல்ல பேரை பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில் சினிமாவைப் போலவே குடும்பத்திலும் அதிகம் கவனம் செலுத்தி வரும் இவர் தனது குடும்பத்துடன் அடிக்கடி வெளியில் செல்வார். அந்த வகையில் தற்போது அவர் குடும்பத்துடன் நேரம் செலவிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story