நம்ம கூடவே பிறந்தது சாகுற வரைக்கும் இருக்கும்.. யார சொல்றாரு..? செல்வராகவனின் திடீர் வீடியோ..!

by ramya suresh |

தமிழ் சினிமாவில் மிகப் பிரபல இயக்குனராக வலம் வந்தவர் செல்வராகவன். இவர் தற்போது நடிகராகவும் அசத்தி வருகின்றார். இவர் தமிழில் மிகப் பிரபல இயக்குனராக இருந்த கஸ்தூரிராஜாவின் மூத்த மகன் ஆவார். துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலமாக எழுத்தாளராக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர். அடுத்ததாக காதல் கொண்டேன் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.

தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட ஏகப்பட்ட நல்ல திரைப்படங்களை கொடுத்திருக்கின்றார். இவரின் புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கச் சொல்லி தொடர்ந்து ரசிகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இயக்கத்தில் பிஸியாக இருந்த செல்வராகவன் அதற்கு பிரேக் கொடுத்துவிட்டு தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார்.

தற்போது தனது தம்பி தனுஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 50-வது திரைப்படத்தில் செல்வராகவன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். செல்வராகவன் அவ்வப்போது வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்களை வீடியோவாக வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கின்றார். அதில் பொறாமை என்பது குறித்த அழகான விளக்கத்தை கொடுத்திருக்கின்றார்.

அந்த வீடியோவில் அவர் தெரிவித்திருந்ததாவது "நம் வாழ்க்கையில் நம் கூடவே பிறந்த ஒன்று இருக்கின்றது. அதுதான் பொறாமை. கை, கால்கள் போன்று அதுவும் ஒரு கூடவே இருக்கும் ஒரு உணர்வு. தெருவுல நடந்து போறவ பொண்டாட்டி அழகா இருந்தா அத பாத்து பொறாமை, பக்கத்து வீட்டுக்காரன் கார் வாங்கிட்டா பொறாமை, நம்ம கூட ஆபீஸ்ல வேலை பார்க்கிறவங்களுக்கு ப்ரோமோஷன் கிடைச்சுட்டா பொறாமை அப்படின்னு சொல்லிக்கிட்டே போலாம்.

பொறாமை என்பது கேன்சர் மாதிரி அது நம்மள போட்டு நச்சரிச்சுக்கிட்டே இருக்கும். நம்ம சாகுற வரைக்கும் நம்மை விடாது. இதை இல்லைன்னு சொல்றவங்கள நம்பவே நம்பாதீங்க, முற்றும் தொறந்தவங்களுக்கு கூட இந்த பொறாமை இருக்கும். இதை அழிக்க முடியாது, இதுக்கு மருந்து கிடையாது. அதை நம்ம ஏத்துக்க பழகிக்கணும்.

பொறாமை வந்துச்சுன்னா வா நண்பா அப்படி ஓரமா உட்காரு ஆமா எனக்கு பொறாமை இருக்கு அப்படின்னு ஒத்துக்கணும். கொஞ்ச நாள் போகப் போக ஒரு மேஜிக் மாதிரி அந்த பொறாமை காணாம போயிடும்" என்று பேசி இருக்கின்றார் செல்வராகவன்.

Next Story