டைப் காஸ்டிங் பண்றீங்களா..? ஆடியன்ஸ் கேள்விக்கு நீங்க பதில் சொல்லிதா ஆகணும்... கொந்தளித்த பிரபலம்...!

by ramya suresh |

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் தனுஷ். இவர் தற்போது இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக வளம் வருகின்றார். பவர் பாண்டி என்ற திரைப்படத்தின் மூலமாக தனது இயக்குனர் பயணத்தை தொடங்கிய இவர் ராயன் என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார். இந்த திரைப்படம் இவரின் 50வது படமாகும்.

தன்னை இவ்வளவு தூரம் வளர்த்து விட்ட மக்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த படத்தை தானே இயக்கி நடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் கடந்த ஜூலை 26 ஆம் தேதி உலகம் எங்கும் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகின்றது. நடிகர் தனுஷ் திரை வாழ்வில் இதுவரை இல்லாத அளவில் ராயன் படத்தின் முதல் நாள் வசூல் அமைந்திருந்தது.

இந்தப் படம் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகி இருக்கின்றது. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், பிரசன்னா ஜிகே எடிட்டிங் செய்து இருக்கின்றார். மேலும் கதாநாயகனாக தனுஷ் நடிக்க அவர்களுடன் இணைந்து சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கின்றார்.

இந்த திரைப்படம் ஒரு பக்கம் ரசிகர்களால் ஆகா ஓகோ என்று வரவேற்கப்பட்டாலும், மற்றொரு புறம் படம் தொடர்பாக சிறு சிறு தவறுகள் குறித்து பத்திரிகையாளர்கள், சினிமா விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் செய்யாறு பாலு தனது பேட்டியில் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றார். இந்த திரைப்படத்தில் லாஜிக் மிஸ்டேக் நிறைய இருக்கின்றது. ராயன் படத்தில் அபர்ணா பாலமுரளியை தாண்டி துஷாரா விஜயன் கேரக்டர் ஒரு ஸ்ட்ராங்கான கேரக்டராக இருக்கின்றது.

இந்த திரைப்படத்தில் அபர்ணா பாலமுருளி ஒரு குடிசைப் பகுதியில் வசித்து வருகின்றார். அவர் வீட்டு கதவை தட்டுகிறார் சந்தீப் கிஷன். உடனே கதவை திறந்த அபர்ணாவின் தந்தை குடிகார நாயே போடா என்று கூறுகின்றார். அதன் பிறகு அபர்ணா பால முரளி அவங்க அப்பாவை தள்ளிவிட்டு ரெண்டு பேரும் சேர்ந்து மது அருந்துகிறார்கள். இந்த காட்சியை எப்படி ஏற்றுக் கொள்வது என்று தெரியவில்லை. பின்னர் குடித்துவிட்டு இருவரும் மழையில் ஆட்டம் போடுகிறார்கள்.

என்ன தான் தனது மகள் தன்னை தள்ளிவிட்டு செல்கிறார் என்றால் ஒரு சாதாரணமாக தந்தை என்ன செய்வார். அவரை அதட்டி உள்ளே செல் என்று சொல்லுவார். இல்லையென்றால் நாளு அடி அடித்து இழுத்துக் கொண்டு செல்வார். ஆனால் அதை எதுவும் அந்த தந்தை செய்யவில்லை. அபர்ணா பாலமுருளி ஒரு பக்கம் அவருடன் போய் குடித்துவிட்டு ஆட்டம் போடுகின்றார். இதை பார்க்கும் போது டைப் காஸ்டிங் செய்வது போல் இருந்தது. அதாவது ஒரு ஏரியா மக்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்பதை சொல்வது போல் இந்த காட்சி இருந்ததாக செய்யாறு பாலு விமர்சித்து பேசி இருந்தார்.

Next Story