கடந்த 2000ம் ஆண்டுகளில் ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகை திவ்யா உன்னி. சபாஷ், கண்ணன் வருவான், பாளையத்து அம்மன், ஆண்டான் அடிமை போன்ற தமிழ் படங்களில் அவர் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் திவ்யாவுக்கு கடந்த 2002ஆம் ஆண்டு சுதிர் சுந்தர் என்பவருடன் திருமணம் நடைபெற்று 2016ஆம் ஆண்டு விவாகரத்து ஆனது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு அருண்குமார் என்று அமெரிக்காவைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்த திவ்யா உன்னி, தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகி உள்ளார். அங்கு அவர் நடன பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அருண்குமார்- திவ்யா உன்னி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் கூடிய புகைப்படம் ஒன்றை திவ்யா உன்னி தனது சமூக வலைதளப் பக்கத்தில் கவெளியிட்டுள்ளார் இதனை அடுத்து திவ்யா உன்னிக்கும் அவரது குழந்தைக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…