அபுதாபியில் கார் ஓட்டுனராக பணியாற்றி வரும் கேரளாவைச் சேர்ந்த கார் ஓட்டுனருக்கு லாட்டரி குலுக்கல் மூலம் 40 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.
கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த ஜிஜேஷ் கொரோத்தன் எனும் ஓட்டுனர் அபுதாபியில் கடந்த 15 ஆண்டுகளாக ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். அவரது குடும்பமும் அங்கேயே செட்டில் ஆகியுள்ளனர். இந்நிலையில் கொரோனா காரணமாக தற்போது எந்த வேலையும் இல்லாமல் தவித்து வந்த அவர் ஒரே நாளில் 40 கோடி ரூபாய்க்கு அதிபதியாகியுள்ளார்.
இவர் அரபு எமிரேட்ஸின் மாதாந்திர அபுதாபி 'பிக் டிக்கெட் லாட்டரி' சீட்டினை வாங்கியுள்ளார். இதற்கானக் குலுக்கல் கடந்த 3 ஆம் தேதி இணையத்தில் நடந்துள்ளது. அதில் அவரது லாட்டரி எண்ணான 041779 க்கு 20 மில்லியன் த்ராம்ஸ் அதாவது 41 கோடி ரூபாய் பரிசாக விழுந்துள்ளது.
இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டுள்ள ஜிஜேஷ் இந்த பணத்தில் சொகுசு கார்கள் வாங்கி வாடகைக்கு விடப்போவதாகவும், தனது மகளின் படிப்பு செலவுக்கு பயனப்டுத்தப்போவதாகும் அவர் தெரிவித்துள்ளார்.
SK 23:…
நடிகர் அஜித்தின்…
நடிகர் யோகிபாபு…
Rajkumar periyasamy:…
மாரி செல்வராஜ்…