எனவே, முதலமைச்சர் மற்றும் பிரதமர் நிவாரண நிதிக்கு நடிகர்கள் உள்ளிட்ட பலரும் நிதியுதவி செய்து வருகின்றனர். நடிகர் அஜித் சமீபத்தில் 1.33 கோடி நிதியுதவி செய்திருந்தார். அதன்பின், நடிகர் விஜய் தற்போது ரூ.1.30 கோடியை நிவாரண நிதியாக அளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும், தமிழக அரசுக்கு ரூ.50 லட்சமும், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சமும், பெப்சி திரைப்பட ஊழியர்களுக்கு ரூ.25 லட்சமும், கர்நாடக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் ஆந்திர முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம், தெலுங்கான மாநிலத்திற்கு ரூ.5 லட்சம், புதுச்சேரி அரசுக்கு ரூ.5 லட்சம் என பிரித்து அவர் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் வறுமையில் இருக்கும் ஏராளமான தனது ரசிகர்களுக்கு அவர்கள் வங்கி கணக்கில் ரூ. 5000 செலுத்தி வருகிறார். இது தொடர்பான ஆதாரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அவற்றை விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
கங்குவா படத்தின்…
Director Atlee:…
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…