50 ரூபாய்க்கு ரெண்டு மட்டன் பிரியாணி கொடுங்க – கடையில் கலவரம் செய்த ஆட்டோக்காரர்கள் !

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பிரியாணிக் கடையில் தகராறு செய்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாணியம்பாடி பேருந்து நிலையத்துக்கு அருகில் கலீம் என்பவரின் காஜா பிரியாணி கடை செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு குடிபோதையில் அங்கு வந்த இரு ஆட்டோ ஓட்டுனர்கள் 50 ரூபாய் கொடுத்து இரண்டு மட்டன் பிரியாணி பார்சல் கேட்டுள்ளனர்.

அதற்கு கடை ஊழியர் 250 ரூபாய் கேட்க அவரை இருவரும் தாக்கியுள்ளனர். அதன் பின் கடையின் உரிமையாளர் வந்து கேட்க அவரையும் தாக்க இரு தரப்புக்கும் இடையில் கைகலப்பாகியுள்ளது. அதன் பிறகு போலிஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட அங்கு சிசிடிவி காட்சிகளின் மூலம் ஜெயபாரத், செல்வபிரபு ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

Published by
adminram