தமிழ் சினிமாவில் 6 பேக் ஹீரோக்கள்..!
தமிழ்சினிமாவில் சிக்ஸ் பேக் உடற்கட்டுகள் வந்தவண்ணம் உள்ளன. சூர்யாவின் வாரணம் ஆயிரம் படத்தில் தான் அறிமுகம். தொடர்ந்து விஷாலின் சத்யம் படம். தனுஷின் பொல்லாதவன். சிம்புவின் போடா போடி. பரத்திற்கு ஒரு 555. அதர்வாவுக்கு இரும்புக்குதிரை.
6பேக் முதலில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு தான் வைத்தார். அவர் சென்னை வந்த நேரத்தில் சிக்ஸ் பேக் பேஷனாகி விட்டதுர். ஹாலிவுட்டின் ஜூரம் பாலிவுட்டிற்கும் தொற்றியது. கான், கபூர் நடிகர்கள் சிக்ஸ் பேக் வைத்து ஒல்லி நடிகைகளுடன் அசல் பாடியில் வந்து டூயட் பாடுவர். வில்லன்களுடன் மோத சிக்ஸ் பேக் அத்தியாவசியத் தேவையானது.
6 பேக் படங்கள் 6 பார்க்கலாமா...
வாரணம் ஆயிரம்
சூர்யா தான் முதன் முதலில் சிக்ஸ் பேக் வைத்தார். வாரணம் ஆயிரம் படத்திற்காகத் தன் உடலை 6 பேக்கிற்கு கொண்டு வந்தார். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த உடற்கட்டைப் பார்ப்பதெற்கென்றே ஒரு கூட்டம் திரையரங்கிற்கு வந்தது.
சத்யம்
படத்திற்காக விஷால் தன் உடலை 6 பேக்கிற்கு மாற்றினார்.
தடம்
தடம் படத்திற்காக அருண் விஜய் 6 பேக் உடற்கட்டுக்குக் கொண்டு வந்தார். இன்று வரை அதை தக்க வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
போஸ்
போஸ் படத்திற்காக விஷ்ணு விஷால் 6 பேக்கிற்கு கொண்டு வந்த படம் இது.
சார்பட்டா பரம்பரை
பா.ரஞ்சித் இயக்கும் சார்பட்டா பரம்பரை படத்திற்காக ஆர்யாவின் 6 பேக் கெட் அப் இதுதான். படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.
விவேகம்
விவேகம் படத்திற்காக தல அஜீத்குமார் வைத்துள்ள கட்டுமஸ்தான 6 பேக் பாடி இதுதான். பார்க்க சும்மா மாஸா...இருக்கும்.
பொல்லாதவன்
6 பேக் வைக்க உடல் பருமன் தேவையில்லை. பெரும்பாலும் நார்மலான பாடி உள்ளவர்கள் தான் வைக்க முடியும். என்றாலும் என்; போல் ஒல்லி நடிகரும் வைக்க முடியும் என்று நிரூபித்துள்ளார் தனுஷ்.
போடா போடி
சிம்புவும் சக நடிகர்களைப் போல 5 பேக் வைக்க ஆசைப்பட்டு தன்னை உருமாற்றிக் கொண்ட படம்.
555
பரத் 6 பேக் உடற்கட்டைக் காட்டி வியக்க வைத்த படம்.
இரும்புக்குதிரை
நடிகர் முரளியின் மகன் அதர்வா இரும்புக்குதிரை படத்திற்காக 6 பேக் கொண்டு தன் உடலை காட்டி மிரட்டினார்.
நிமிர்ந்து நில்
சமுத்திரக்கனி இயக்கிய நிமிர்ந்து நில் படத்திற்காக ஜெயம் ரவியின் கட்டுமஸ்தான 6 பேக் உடற்கட்டு. பார்க்கவே முறுக்கேறிப் போய் உள்ளது அல்லவா..!
இதைப்பார்த்து விட்டு நமக்கும் 6 பேக் ஆசை வரத்தான் செய்யும்.
6 பேக் நாமும் வைக்க என்ன செய்வது என்றால் 3 வழிகள் தான்.
சிக்ஸ் பேக் என்பது எல்லோருக்கும் இருக்கிறது. நமது உணவு பழக்கம், உடல் உழைப்பு இல்லாமல் போவது இதன் காரணமாக வயிற்று பகுதியில் கொழுப்பு சேர்ந்து அந்த சிக்ஸ் பேக்கை மறைத்து விடுகிறது.
இஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டு கடுமையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாட்டுடன் இருந்தால் சிக்ஸ் பேக் வந்து விடும். மாறாக, கொழுப்பை குறைக்க ஊசி போட்டுக் கொள்வதும், மாத்திரை உட் கொள்வதும் குறுக்கு வழி. அதனால் வரும் ஆபத்துக்களும் தனி. சிக்ஸ் பேக் வந்தபிறகு அதை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள அதே டயட்டையும், உடற்பயிற்சியையும் தொடர வேண்டும். இல்லாவிட்டால் இரண்டே மாதத்தில் பழைய பாடி வந்து விடும்.