More

கொரோனாவுக்கு 6  மாத குழந்தை பலி – சண்டிகரில் அதிர்ச்சி

இந்நிலையில், கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் 4 மாத குழந்தை கொரோனா தொற்று பாதிப்பால் மரணமடைந்துளது. கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த அந்த குழந்தை இன்று காலை உயிரிழந்தது. 

Advertising
Advertising

இந்த குழந்தை பிறந்தது முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. அதோடு, கடந்த 21ம் தேதி அந்த குழந்தைக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து  அக்குழந்தைக்கு சிகிச்சை அளித்த 4 மருத்துவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல், சண்டிகரில் ஒரு தம்பதியின் 6 மாத குழந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 9ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. கடந்த 21ம் தேதி அக்குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அக்குழந்தை இறந்துவிட்டது.

கொரோனா வைரஸுக்கு பச்சிளம் குழந்தைகள் பாலியாகி வருவது இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
adminram

Recent Posts