தேவ் படத்துக்குப் பிறகு கார்த்தி நடித்து வரும் சுல்தான் திரைப்படம் 90 சதவீதம் முடிந்துவிட்டது என அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தெரிவித்துள்ளார்.
சென்ற ஆண்டு கைதி என்ற மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த கார்த்தி அதன் பின்னர் தம்பி மற்றும் தேவ் என இரு அட்டர் பிளாப் படங்களைக் கொடுத்து ரசிகர்களை ஏமாற்றினார். இந்நிலையில் இப்போது அவர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் மற்றும் ரெமோ படத்தின் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் “சுல்தான்” ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக எஸ் ஆர் பிரபு தயாரித்து வருகிறார். இப்படம் பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்த தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு ‘சுல்தான் படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு மற்றும் எடிட்டிங் பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமிருக்கும் பணிகள் கொரோனா லாக்டவுனுக்குப் பின்னர் நடக்கும். ரிலிஸ் பற்றி எந்த திட்டமும் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்.
Vidamuyarchi: நேற்று…
பாலா இயக்கிய…
சினிமாவில் ஒரு…
லைகா நிறுவனத்தின்…
நயன்தாரா, தனுஷ்…