உருவாகிறது 90ஸ் நயன்தாரா சவுந்தர்யாவின் பயோபிக் – நடிக்கப்போவது இவர்தான்!

by adminram |

123a6d7b623642872537929f85e0fa11

90களில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நாயகியாக திகழ்ந்த சௌந்தர்யாவின் பயோபிக் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

1993 ஆம் ஆண்டு வெளியான பொன்னுமனி எனும் படத்தின் மூலம் இயக்குனர் ஆர் வி உதயகுமாரால் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை சௌந்தர்யா. அதன் பிறகு தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமலஹாசன், சிரஞ்சீவி, மம்மூட்டி என ஜோடியாக நடித்து தென்னிந்தியாவின் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை சௌந்தர்யா. ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் குறைந்த போது திருமணம் செய்துகொண்டார்.

குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுக் கொண்டே அரசியலில் இறங்க முடிவெடுத்த அவர் பாஜகவில் சேர்ந்தார். 2004 ஆம் ஆண்டு பாஜகவுக்காக பிரச்சாரத்திற்காக சென்ற அவர் ஹெலிகாப்டர் விபத்தில் அவர் மரணமடைந்தார்.அவர் மறைந்து 16 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க உள்ளனர். இந்த படத்தில் சௌந்தர்யா வேடத்தில் நடிக்க சாய்பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

0b6c748ff3b70c870510f17dd0cf0f29-1

Next Story