அக்கட தேசத்தில் அடிவாங்கிய ’96’ – கோடிகளில் நஷ்டம் ?

சமந்தா மற்றும் சர்வானந்த் நடித்த 96 படத்தின் ரீமேக்கான ஜானு படம் தெலுங்கில் மோசமாக வசூல் செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

தமிழில் கடந்த ஆண்டு வெளியான 96 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அதன் தெலுங்கு பதிப்பு சமந்தா மற்றும் சர்வானந்த் நடிப்பில் உருவானது. தமிழில் இயக்கிய இயக்குனரே அந்த படத்தையும் இயக்கினார். தமிழில் பெருவெற்றி அடைந்ததை அதிக பட்ஜெட்டில் படம் உருவாக்கப்பட்டது.

படம் ரிலிஸாகி ஒருவாரம் ஆகியுள்ள நிலையில் இப்போது படத்தின் வசூல் நிலவரங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களைக் கதிகலங்க வைத்துவிட்டன. 21 கோடி ரூபாய் செல்வு பண்ணிய படத்தின் வசூல் இப்போது வரை வெறும் 7 கோடி ரூபாய் மட்டுமே வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் சில கோடிகளில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Published by
adminram