இந்தியாவில் ஜான் ரைட் பயிற்சியாளராக இருந்த காலத்தில் நூதனமான முறை ஒன்றைக் கையாண்டு பவுலர்களின் பேட்டிங் திறமையை மேம்படுத்தியதாக லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தொன்று தொட்டு வழக்கமாக பவுலர்கள் பேட்டிங் திறமையை வெளிப்படுத்தியது இல்லை. ஆனால் ஜான் ரைட் பயிற்சியாளராக இருந்த காலத்துக்குப் பின் இதில் மாற்றம் ஏற்பட்டது. அவர் அப்படி என்ன மாயாஜாலம் செய்தார் என முன்னாள் வீரர் வி வி எஸ் லட்சுமனன் மனம் திறந்து பேசியுள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் ‘பவுலர்களின் பேட்டிங் திறமையை வெளிக்கொண்டதில் ஜான் ரைட்டுக்குதான் அதிக பங்கு உள்ளது. அவர் ஒரு பவுலருக்கு ஒரு பேட்ஸ்மேனைக் கோட்சாக நியமித்தார். நான் ஜாகீர் கானுக்கு பயிற்சியாளராக செயல்பட்டேன். அதன் பின்னர்தான் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் மற்றும் ஜாகீர் கான் போன்றவர்கள் சிறப்பாக செயல்பட்டனர்’ எனத் தெரிவித்துள்ளார்.
ஞானவேல் ராஜா…
Good bad…
கங்குவா திரைப்படத்தில்…
சிவகார்த்திகேயனைப் பொருத்த…
கங்குவா படத்தின்…