படத்தில் நிறைய லாஜிக் மிஸ்டேக்... ஏ.ஆர் ரகுமான் இசையால் தப்பிச்ச ராயன்... பிரபலம் சொன்ன தகவல்...!
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரின் 50வது திரைப்படம் தான் ராயன். இந்த திரைப்படத்தை இவரே இயக்கி நடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் கடந்த ஜூலை 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகின்றது. தொடர்ந்து ரசிகர்கள் இந்த திரைப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.
இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரித்திருக்கின்றது. 26 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு தொடர்ந்து மக்கள் கூடி வருகிறார்கள்.
சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் அனைத்து திரையரங்குகளிலும் டிக்கெட் புக்கிங் அனல் பறந்து வருகின்றது. பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து ஒரு மிகப்பெரிய சம்பவத்தை செய்திருக்கின்றார் தனுஷ். படம் முழுக்க ரத்தம் தெறிக்க வெறித்தனமாக திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார் நடிகர் தனுஷ் என்று பலரும் புகழ்ந்து பேசி வருகிறார்கள்.
இந்த திரைப்படத்தை நடிகர் தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் போல் இயக்கியிருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெற்றிமாறன் போல் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்த திரைப்படம் வடசென்னை போல் இருப்பதாக ஒரு சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பிரபல மூத்த பத்திரிகையாளரான செய்யாறு பாலு சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார்.
அதில் இந்த திரைப்படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். "இந்த திரைப்படத்தை மிகச் சிறப்பாக நடிகர் தனுஷ் இயக்கி இருக்கின்றார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் நிறைய லாஜிக் மிஸ்டேக் இருக்கின்றது. இந்த படத்தில் தனது அப்பா அம்மா காணாமல் போனதற்கு பிறகு அண்ணன் தனுஷ் முன் நின்று தம்பிகள் மற்றும் தங்கையை கவனித்து வருவதாக படத்தின் கதைக்களம் நகர்கின்றது.
ஆனால் படத்தின் கடைசி வரை அந்த அப்பா அம்மா எதற்காக காணாமல் போனார் என்பது குறித்து தெரிவிக்கவே இல்லை. குறிப்பாக ஒரு போலீசார் ஆபீசரின் கதாபாத்திரம் குளறுபடியாகவே இருந்தது. ஒரு இரண்டு கேங்ஸ்டர் இருக்கிறார்கள். அந்த கேங்ஸ்டர் பிடிக்க வேண்டும் என்பதற்காக ஒரு போலீஸ் அதிகாரி வருகின்றார். அவருக்கு ஒரு பிளாஷ் பேக் இருக்கின்றது. ஒரு நேர்மையான எஸ்ஐ-யை எரித்து கொலை செய்து விடுகிறார்கள் என்று அந்த எஸ்ஐ மகனாகத்தான் இந்த போலீஸ் அதிகாரி.
ஆனால் அவர் ஒரு ஏசியா? டிசியா? என எந்த ஒரு விஷயத்தையும் தெரிவிக்கவில்லை. ஒரு நேரத்தில் போலீஸ் அதிகாரியாக தெரிகின்றார். மற்றொரு நேரத்தில் லுங்கி கட்டிக் கொண்டு வருகின்றார். கடைசி வரைக்கும் அவர் எந்த மாதிரியான போலீஸ் அதிகாரி அல்லது உளவு துறை அதிகாரியா என எதையும் தெரிவிக்கவில்லை. இதுவும் ஒரு லாஜிக் மிஸ்டேக்காக தான் இருந்தது.
மேலும் முதல் பாகம் விறுவிறுப்பாக சென்றாலும் இரண்டாவது பாகம் சற்று ஸ்லோவாக தான் சென்றது. இரண்டாவது பாகத்தில் ரசிகர்களை உட்கார வைத்தது ஏ ஆர் ரகுமானின் இசை தான். இந்த திரைப்படத்தில் அவரின் பின்னணி இசை படத்தை வேற லெவலுக்கு எடுத்துச் சென்று விட்டது. மேலும் அபர்ணா பாலமுரளியை காட்டிலும் துஷாரா விஜயனின் கதாபாத்திரம் மிகச் சிறப்பாக இருந்தது" என்று செய்யாறு பாலு தனது பேட்டியில் தெரிவித்து இருக்கின்றார்.