Categories: latest news

போற போக்க பாத்தா உலகநாயகனே மிஞ்சிருவாரு போலையே… பாவம்பா நம்ம அஜித்… ஆனா அந்த செலவு தான்…

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் பல போராட்டங்களுக்குப் பிறகு ஒரு வழியாக எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நடிகர் அஜித் தற்போது ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விடாமுயற்சி திரைப்படம் குறித்து ஒரு தகவல் வெளியானது. அதாவது விடாமுயற்சி திரைப்படம் 1997 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்த பிரேக் டவுன் என்ற படத்தின் தழுவல் என கூறப்படுகின்றது. இதற்கான முழு உரிமையையும் வாங்கிவிட்டு இந்த திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள் என்று கூறியிருந்தார்கள்.

இதையடுத்து பல விமர்சனங்கள் எழுந்து வந்தது. அந்த திரைப்படத்தை எடுப்பதற்கு எதற்கு ஒரு நாளைக்கு 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டும். அதற்கு இங்கேயே படத்தை எடுத்திருக்கலாமே என்று பலரும் பலவிதமாக கூறி வந்தார்கள். இந்நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு தனது பேட்டியில் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றார்.

விடாமுயற்சி படத்தை பிரேக் டவுன் என்ற படத்தை காப்பி எடுத்து அப்படியே எடுத்து வைத்திருக்கிறார்கள். ஒரு ஆங்கில படத்தின் தழுவலுக்கு எதற்காக இவ்வளவு செலவு செய்ய வேண்டும். அந்த காலத்தில் கமலஹாசன் தான் அதிக அளவு ஆங்கில படங்களை இன்ஸ்பையராக வைத்து படங்களை எடுத்த நடிகர். அதனால்தான் அவரை உலகநாயகன் என்று அழைக்கிறார்கள்.

அவர் நடித்த அவ்வை சண்முகி, மகாநதி, சதிலீலாவதி உள்ளிட்ட பல படங்களை கூறிக் கொண்டே போகலாம். கமலஹாசன் நடித்த திரைப்படங்களில் பாதிக்கு பாதி திரைப்படங்கள் ஆங்கிலப் படங்களை இன்ஸ்பையராக வைக்கப்பட்டு எடுக்கப்பட்ட திரைப்படங்கள் தான். அதற்கு அடுத்ததாக அஜித் இருக்கின்றார். இவரின் துணிவு திரைப்படமும் ஒரு ஆங்கில படத்தின் தழுவல் என்று கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது விடாமுயற்சி திரைப்படமும் அதுபோன்ற ஒரு கதை தான் என்று கூறியிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது” என அவர் தெரிவித்து இருக்கின்றார்.

ramya suresh

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

5 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

5 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

6 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

7 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

13 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

14 hours ago