மீரா மிதுன், ரைசா வரிசையில் ஒரு மாடல் அழகி – களைகட்டும் பிக்பாஸ் 5!

கமல் ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு பிரபல நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்துவிட்டது. தற்போது 5வது சீசன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதில் போட்டியாளர் தேர்வு ஆடியன்ஸின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

இந்நிலையில் தற்போது இந்நிகழ்ச்சியில் பிரபல மாடல் அழகியான நமீதா மாரிமுத்து கலந்துக்கொள்ள இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதற்கு முன்னர் பவானி ரெட்டி, சந்தோஷ், மிலா, தொகுப்பாளினி பிரியங்கா, ஜி.பி. முத்து உள்ளிட்டோர் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

Published by
adminram