தலைக்கு ஒரு விஸ்வாசம்… சிவகார்த்திகேயனுக்கு ஒரு ஹீரோ – தயாரிப்பாளர் பெருமிதம் !

ஹீரோ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே ஜே ஆர் ராஜேஷ் இந்தப்படம் அஜித்தின் விஸ்வாசம் போல மிகப்பெரிய வெற்றி பெறும் எனக் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன்,அர்ஜுன் மற்றும் பாலிவுட் நடிகர் அபய் தியோல் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோ திரைப்படம் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதன்  டிரைலர் நேற்று காலை வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிகழ்வில் பேசிய இந்த படத்தை தயாரித்த கே ஜே ஆர் ராஜேஷ் அஜித்தின் விஸ்வாசத்தோடு ஒப்பிட்டு பேசினார்.

அவரது பேச்சில் ‘அவர் அஜித்துக்கு விஸ்வாசம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்ததைப் போல சிவகார்த்திகேயனுக்கு ஹீரோ படம் அமையும்’ எனப் பேசியுள்ளார். பேட்ட படத்தோடு வெளியான விஸ்வாசம் படத்தை சிறப்பாக மார்க்கெட்டிங் மற்றும் விநியோக முறைகளால் மிகப்பெரிய வெற்றி பெறவைத்தார் ராஜேஷ் என்ற பெருமை கோலிவுட்டில் அவருக்கு உண்டு.

Published by
adminram