More

கிளைமாக்ஸில் மிரட்டிய தமிழ் சினிமாக்கள் – ஒரு பார்வை

ஒரு படத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகிப்பது கிளைமாக்ஸ் தான். படத்தின் கதை சாதாரணமாக போனாலும், கிளைமாக்ஸில் ஒரு அள்ளு அள்ளிவிடும். அப்போது தான் 20 -20 மேட்ச் போல் கதையில் பல ட்விஸ்ட்கள் வரும். ரசிகர்கள் இந்தப்படம் எப்படி முடியப்போகிறது என்ற ஆவலில் இருக்கையின் நுனியில் அமர்ந்திருப்பார்கள்.

Advertising
Advertising

ரசிகர்கள் எதிர்பாராத வகையில் கிளைமாக்ஸ் அமைந்து அது அவர்களுக்கு பிடித்து விட்டால் படம் மெகா ஹிட் ஆகி விடும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. சரி. அப்படிப்பட்ட கிளைமாக்ஸ் எந்தெந்த படத்தில் யாரும் எதிர்பாராத வகையில் உள்ளது என்றால் தமிழ்சினிமாவில் நிறைய படங்கள் அந்த வரிசையில் இடம்பெறும்.

குறிப்பாக அந்தக்காலத்தில் என்றால் பாலசந்தர், பாக்யராஜ் படங்களை உதாரணமாகச் சொல்லலாம். நாம் 2000 காலகட்டத்தில் வெளியான சில படங்களைப் பற்றி இங்கு பார்க்கலாம். 

மங்காத்தா 

2011ல் வெளியான சூப்பர்ஹிட் ஆக்ஷன் த்ரில்லர் படம் மங்காத்தா. வெங்கட்பிரபு இயக்கிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 500 கோடியை சுருட்டும் வேலையை அஜீத் அன் கோ செய்ய முயற்சிக்கிறது. அர்ஜூன் போலீஸ் அதிகாரியாக வலம் வருகிறார். அவர் அஜீத் மற்றும் அவரது குழுவினரைக் கண்காணித்து அழிக்கிறார்.

ஆனால் இறுதியில் அஜீத் மற்றும் அர்ஜூனின் திட்டப்படி தான் அந்த கொள்ளையர் குழுவினரிடம் இருந்து கைப்பற்றியது என்பது தெரியவருகிறது. இதை ரசிகர்கள் சிறிதும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். இந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. பாக்ஸ் ஆபீசில் ப்ளாக்பஸ்டர் மூவியாக 2011ல் திகழ்ந்தது. 

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் 

2020ல் வெளியான படம் இது. துல்கர் சல்மான், ரிதுவர்மா நடித்த படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். கவலையற்ற மனிதனாக துல்கர் சல்மான் இப்படத்தில் வாழ்ந்து காட்டியுள்ளார். சிறு சிறு திருட்டின் மூலம் தனக்கான வருமானத்தை ஈட்டுகிறார். இவர் திடீரென ரிதுவர்மாவின் காதல் வலையில் விழுகிறார்.

அவரோ துல்கர் சல்மானுக்கு சிறிதும் எதிர்பாராத அளவில அதிர்ச்சியைத் தருகிறார். துல்கர் சல்மானைப் போல தானும் அவரைக் காதலில் ஏமாற்றி விடுகிறார்.  தேசிங்கு பெரியசாமி இயக்கிய இப்படம் ஒரு காதல் நாடகம். துல்கர் சல்மான் மெகா ஸ்டார் மம்முட்டியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 

துருவங்கள் 16 

கார்த்திக் நரேன் இயக்கிய க்ரைம் த்ரில்லர் படம். 2016ல் வெளியானது. கோவையில் நள்ளிரவில் ஒரு கொலை நடக்கிறது. தற்கொலை என்று பதியப்பட்டுள்ள இந்தக் கொலையை செய்தது யார் என துப்பறிகிறார் போலீஸ் அதிகாரி ரகுமான். அதே இரவில் 3 பொறுப்பற்ற இளைஞர்க் காரில் மோதி ஒருவர் இறந்து விடுகிறார்.

அந்தக்குற்றத்தை மறைக்க 3 பேரும் அதே காரில் சடலத்தை எடுத்துச் செல்கின்றனர். மறுநாள் காலையில் சடலம் மாயமாகிறது. கொலையாளி யார்? கார் விபத்தில் இறந்தவரின் சடலம் எங்கே போனது என்பதை சுவாரசியமாக சொல்கிறது துருவங்கள் 16. 

பீட்ஷா 

பீட்ஷா டெலிவரி பாயாக மைக்கேல் வேலை செய்கிறான். இவருடன் திகில் கதைகளை எழுதும் பெணணாக அனுவும் இணைந்து வசிக்கிறார். ஆனால் கதையின் முடிவில் அனு மற்றும் மைக்கேல் குழுவினர் பீட்ஷா கடை முதலாளியிடம் இருந்து பீட்ஷாவில் வைத்து வைரத்தைக் கடத்துகிறது என்பது தெரியவருகிறது.

அதுவரை படம் ஒரே திகில் கலந்த த்ரில்லிங்காகவே செல்கிறது. ரசிகர்கள் காட்சிக்கு காட்சி இருக்கையின் நுனியில் பயந்தபடியே இருக்கிறார்கள். விஜய் சேதுபதியும், ரம்யா நம்பீசனும் இணைந்து இந்தப்படத்தில் நடித்து வெற்றி முத்திரையைப் பதித்துள்ளார்கள். படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பட வரிசையில் பெயர் சொல்லும் வெற்றிப்படம் இது. 

ஜிகர்தண்டா 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய காமெடி படம் தான் ஜிகர்தண்டா. சித்தார்த், பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சித்தார்த் பட இயக்குனராக வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர். அவர் மதுரை ரவுடி கதையை அவருக்கே தெரியாமல் எடுக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்குகிறார். 

பாபிசிம்ஹா தான் அந்த ரவுடி. தானே இந்த கதையில் நடிக்கிறேன். நீ இயக்கு என சித்தார்த்திடம் பாபி சிம்ஹா கூறுகிறார். அதற்கு சித்தார்த்தும் சம்மதிக்கிறார். படம் வெளியாகி வெற்றி பெறுகிறது. 

ஆனால் படத்தில் ரவுடி சிம்ஹாவை பெரிய ரவுடியாகக் காட்டாமல் அட்டக்கத்தியாக மாற்றி காட்டுகிறார் சித்தார்த். இதனால் கோபம் அடைந்த சிம்ஹா அவரைக் கொல்லத் துடிக்கிறார். ஆனால் கிளைமாக்சில் மனமாற்றம் ஏற்பட்டு ரவுடி தொழிலையே விட்டு விட்டு ஹீரோவாகிறார். சித்தார்த்தோ கத்திமுனையில் அவரிடம் கால்ஷீட் வாங்கி ரவுடியாக மாறி விடுகிறார். 

Published by
adminram

Recent Posts