17 வயது சிறுவனோடு காதல்… 26 வயது பெண் ஓட்டம் – பெற்றோர்கள் அவதி !

பக்கத்து வீட்டில் இருந்த 17 வயது பையனோடு தலைமறைவாகியுள்ளார் 26 வயது மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர்.

மதுரையில் தனது தாத்தா வீட்டில் தங்கி படித்து வருகிறான் அந்த 17 வயது சிறுவன். இந்நிலையில் படிப்பு சம்மந்தமாக பக்கத்து வீட்டில் இருந்த 26 வயது பெண்ணுடன் அவர் நட்பாக பழகியுள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையிலான நட்பு காதலாக மாறியுள்ளது.

ஆனால் இருவீட்டாருக்கும் அவர்களின் மேல் எந்த சந்தேகமும் ஏற்படாமல் இருந்துள்ளது. இதையடுத்து அந்த பெண் அந்த சிறுவனை அழைத்துக்கொண்டு சென்று தலைமறைவாகியுள்ளார். இது சம்மந்தமாக இருவரின் வீட்டாரும் போலீஸில் புகாரளிக்க போலிஸார் இப்போது இருவரையும் தேடி வருகின்றனர்.

Published by
adminram