விழுப்புரம் சித்தேரிக்கரை பகுதியை சேர்ந்தவர் அருண். நகை செய்யும் தொழிலாளி ஆன இவருக்கு சிவகாமி என்கிற மனைவியும், பிரியதர்ஷினி, யுபஸ்ரீ, பாரதி என 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், நகை தொழில் நலிவடைந்ததால் அவர் 3 நம்பர் லாட்டரி சீட்டுகளை வாங்க துவங்கினார். 100 முதல் 500 வரை விற்கப்படும் இந்த லாட்டரி சீட்டுகளுக்கு 50 ஆயிரம் முதல் லட்சங்கள் வரை பரிசுகள் கிடைக்கும் என விற்கப்படுகிறது. நிறைய கடன் வாங்கி அருண் இந்த லாட்டரி சீட்டுகளை தொடர்ந்து வாங்கி வந்ததால் கடனாளி ஆனார்.
கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்க துவங்கவே விரக்தி அடைந்த அருண் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வது என முடிவெடுத்து முதலில் தனது 3 குழந்தைகளுக்கும் நகை செய்ய பயன்படும் சயனைடு விஷத்தை கொடுத்துள்ளார். அதன்பின் தானும் தனது மனைவியும் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக வீடியோவில் பதிவு செய்தார். அந்த வீடியோக்களை தனது நண்பர்களுக்கும் அனுப்பினார். எனவே, அவர்கள் பதறியடித்து அருணின் வீட்டிற்கு ஓடினர்.
பூட்டை உடைத்து உள்ளே சென்ற போது அங்கு அனைவரும் சடலமாக கிடந்தனர். இதுபற்றி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அப்பகுதியில் தொழில் நசிவு காரணமாக ஏராளமான தொழிலாளர்கள் லாட்டரி சீட்டிற்கு அடிமையாக உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பல வருடங்களுக்கு முன்பே தமிழக அரசு லாட்டரி சீட்டு விற்பனையை தடை செய்து விட்டது. ஆனாலும், முறைகேடாக இப்படி லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
Sivakarthikeyan: இசை…
ஜெயம் ரவி…
நடிகை கஸ்தூரி…
சினிமா செலிப்ரட்டிகளுக்கு…
தற்போது விஜய்…