More

ஒரு தாயின் பரிதவிப்பு: கீர்த்தி சுரேஷின் “பென்குயின்” ட்ரெய்லர்!

இப்படத்தின் படப்பிடிப்புகடந்த செப்டம்பர் 12ம் தேதி துவங்கியது. இதற்கிடையில் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் திரையரங்குகள் அனைத்தும் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டுள்ளது. ஆதலால், ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertising
Advertising

இதனால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் ஓடிடி ப்ளாட்பாரத்தில் ரிலீஸ் செய்யப்படுகிறது. பொன்மகள் வந்தாள் படத்தை தொடர்ந்து தற்போது “பென்குயின்” படமும் வருகிற ஜூன் 19 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாகியுள்ளது. மகன் அஜய் மர்ம நபரால் கடத்தி கொலைசெய்யப்படுகிறான். ஒரு தாயாக கீர்த்திசுரேஷின் பரிதவிப்பும், குழந்தையை தேடி போராடுவதும் அவரது நடிப்பு திறமை பாராட்டத்தக்கது.

Published by
adminram

Recent Posts