Connect with us

திடீரென பின்வாங்கிய சந்தானத்தின் ஒரு படம்: எந்த படம் தெரியுமா?

திடீரென பின்வாங்கிய சந்தானத்தின் ஒரு படம்: எந்த படம் தெரியுமா?

நடிகர் சந்தானம் நடித்த டகால்டி திரைப்படம் ஜனவரி 31ஆம் தேதி ரிலீஸாகும் என கடந்த சில வாரங்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டு அதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தன

2bc008286e8911aa6f3c885eaa2ff334-4

நடிகர் சந்தானம் நடித்த டகால்டி திரைப்படம் ஜனவரி 31ஆம் தேதி ரிலீஸாகும் என கடந்த சில வாரங்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டு அதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தன

இந்த நிலையில் திடீரென சில நாட்களுக்கு முன்னர் சந்தானம் நடிப்பில் நீண்ட நாள் கிடப்பில் இருந்த சர்வர் சுந்தரம் திரைப்படமும் ஜனவரி 31ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் ஒரே நாளில் சந்தானம் நடித்த இரண்டு படங்கள் வெளியாகின்றன என்ற ஆச்சரியம் கோலிவுட் திரையுலகில் ஏற்பட்டது. இருப்பினும் சர்வர் சுந்தரம் திரைப்படம் பின்வாங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இன்று காலை நிலவரப்படி இரண்டு திரைப்படங்களும் ஜனவரி 31ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது

இந்த நிலையில் சற்று முன் வெளிவந்த தகவலின்படி சர்வர் சுந்தரம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி திடீர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படம் வரும் காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி பல முறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிப்ரவரி 14ஆம் தேதியாவது வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Continue Reading
To Top