ப்ளீஸ் சார் மீசை வேண்டாம்.. சினிமா பிரபலத்திடம் ரசிகர்கள் கோரிக்கை!

Published on: September 6, 2021
---Advertisement---

83b72a2d17201c3b26fe796c13223b42-1

இந்திய சினிமா மட்டுமின்றி உலக சினிமாவையே தனது இசையால் கட்டிப்போட்டவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இன்று இந்தியாவின் நம்பர் 1 இசையமைப்பாளரான இவர் இரண்டு ஆஸ்கார் விருதுகளுக்கு சொந்தக்காரர் என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான்.

இதற்காக இவர் சிறுவயது முதல் பல கஷ்டங்களை சந்தித்ததாக முன்னர் ஒரு பேட்டியில் இவரே கூறியுள்ளார். கடைசியாக இவர் விஜய் நடிப்பில் கடந்த 2019ல் வெளியான பிகில் படத்திற்கு இசையமைத்திருந்தார். இதன்பின் இவர் இசையில் எந்தவொரு தமிழ் பாடலும் வெளியாகவில்லை.

d13d4625b625496d704bbcedeb3f6306
A. R. Rahman

தற்போது இவர் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’, சிவகார்த்திகேயனின் ‘ அயலான்’, சிம்புவின் ‘பத்து தல’, ‘வெந்து தணிந்தது காடு’, மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவரை கைவசம் தற்போது தமிழ், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் என 15க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளது.

எப்போதும் அமைதியாக, மெல்லிய புன்னகையுடன் முகைத்தை வைத்திருக்கும் இவர் எந்த வேலையென்றாலும் அமைதியாக அதை செய்து முடித்துவிடுவார். இசையமைப்பாளராக மட்டுமின்றி சில படங்களையும் இவர் தயாரித்துள்ளார்.

aedf8178727cd704a25087a9a84365ed
A. R. Rahman

சினிமா தாண்டி ஏ.ஆர்.ரகுமான் அவ்வப்போது சின்னத்திரையில் இசை நிகழ்ச்சிகளில் நடுவராகவும் கலந்துகொண்டதுண்டு. சமீபத்தில் இவர் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் ஒரு படத்தை பதிவேற்றினார். அந்தப் படத்தில் அவர் முதன்முறையாக மீசையுடன் காட்சியளித்துள்ளார்.

இதைப்பார்த்தாஹ் ரசிகர்களும், நட்சத்திரங்களும் மீசை மட்டும் வேண்டாம் தலைவா, நல்லாவே இல்லை என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Comment