வல்லுறவு செய்ய வந்தவனிடம் பெண் சொன்ன ஒருவார்த்தை –உயிரைக் காப்பாற்றிய கொரோனா !

Published on: February 8, 2020
---Advertisement---

6a6b2115037fc9c2ed7895fc7bf62022

சீனாவில் பல நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து வரும் கொரோனா வைரஸ் முதல் முறையாக ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.

கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள வூஹான் நகரத்திற்கு அருகில் அமைந்துள்ளது ஜிங்ஷான் என்ற நகரம். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கொள்ளையடிக்க புகுந்த திருடன் ஒருவன், அந்த வீட்டில் தனியாக இருந்த பெண்ணைப் பார்த்து அவரை வல்லுறவு செய்ய முயன்றுள்ளான்.

அந்த பெண் அவனைப் பார்த்து கத்த முயல அவரின் கழுத்தை நெறித்துள்ளான். அப்போது சமயோஜிதமாக யோசித்த அந்த பெண் இரும ஆரம்பித்துள்ளார். நீண்ட நேரம் இருமிய அவர் தான் வூஹான் மாகாணத்தில் இருந்து வருவதாகவும் தனக்குக் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் தனிமைப்படுத்தி வைத்திருப்பதாகவும் சொல்லியுள்ளார்.

இதைக்கேட்ட அந்த இளைஞன் பணமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என அலறியடித்து ஓடியுள்ளான். இதன் பின் அந்த பெண் அளித்த புகாரின் படி திருடனைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

Leave a Comment