அண்ணாத்த படத்தில் புது வில்லன் நடிகர்.. வெளியான அறிவிப்பு…

ரஜினி தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சிறுத்தை, வேதாளம், வீரம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இப்படத்தை இயக்கி வருகிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் இறுதி படப்பிடிப்பு 4 நாட்கள் கொல்கத்தாவில் நடைபெறுவதாகவும், ரஜினி கொல்கத்தா செல்ல வேண்டியிருந்தது. ஆனால், தற்போது அது மாற்றம் செய்யப்பட்டு சென்னையிலேயே படப்பிடிப்பு நடந்து வருகிறது. சமீபத்தில் வடபழனியில் உள்ள ஃபோரம் ஹாலின் கார் பார்க்கிங் பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றது. அடுத்து லக்னோவில் சில காட்சிகளை படம் பிடிக்கவுள்ளனர். அதன்பின் சில நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விடும்.

இந்நிலையில், இப்படத்தில் பாலிவுட் நடிகர் அபிமன்யூ சிங் இப்படத்தில் நடிப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர் தமிழில் தலைவா, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களில் ஏற்கனவே வில்லனாக நடித்துள்ளார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Published by
adminram