இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2100 ஐ தாண்டியுள்ளது. பலி என்ணிக்கை 53 ஆக உள்ளது. தமிகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக உள்ளது. இந்நிலையில் இன்று காலை மக்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்ட மோடி அதில் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதில் பேசிய மோடி ‘சமூக விலகல் காரணமாக தனியாக இருந்தாலும் அவர்களோடு 130 கோடி இந்தியர்களும் உள்ளனர். நமது சமூகவிலகலை இப்போது உலகமே பின் பற்றுகிறது. ஏப்ரல் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள மின்சார விளக்குகளை அணைத்து விட்டு அதற்கு பதிலாக டார்ச் லைட், அகல் விளக்குகள், செல்போன் டார்ச் அல்லது மெழுகுவர்த்திகளை ஏற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா ஏற்படுத்திய இருளில் இருந்து வெளிச்சத்துக்கு வருமாறு மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன். இரவு 9 மணிக்கு தொடங்கி 9 நிமிடங்கள் இதை நீட்டிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் நமக்காக உழைக்கும் மருத்துவர்களை நினைத்துப் பார்க்கவேண்டும்.’ எனக் கூறியுள்ளார்.
Sun serials:…
நடிகர் சூர்யாவும்…
Aishwarya Rai: சினிமாவில்…
Biggboss Tamil:…
Game Changer:…