ஜிவி பிரகாஷின் 75வது படம் குறித்த அதிரடி அறிவிப்பு

Published On: January 2, 2020
---Advertisement---

101abda101c5ed97e5de05e452004deb-2

கடந்த 2006ம் ஆண்டு ’வெயில்’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிவி பிரகாஷ், கடந்த 14 ஆண்டுகளில் 74 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இதனையடுத்து தான் இசையமைக்கும் 75வது படம் குறித்த அறிவிப்பை இன்று வெளியிடுவதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சற்று முன்னர் அந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜிவி பிரகாஷின் 75வது படம், சூர்யா நடிக்கவிருக்கும் 40வது படம் தான் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார், கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா-ஹரி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது 

சூர்யாவின் 40வது படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தான் என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அடுத்ததாக இந்த படத்தில் இணையும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளிவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment