தொடர்ந்து ஐஸ்வர்யா ராய், மற்றும் ஆராதனா என ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 4 பேருக்கு கொரோனா தொற்று பரவியது. இதையடுத்து நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர்களது குடுப்பதில் அனைவரும் குணமடைந்து மீண்டு வர ரசிகர்கள் கோவில்களில் சிறப்பு யாகம் செய்தனர்.
ரசிகர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறி நடிகை ஐஸ்வர்யாராய் மற்றும் மகள் ஆராத்யா கடைசியாக நடிகர் அமிதாப் பச்சன் என குடும்பத்தில் மூன்று பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த நடிகர் அபிஷேக் பச்சன் சற்றுமுன் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு விட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், இன்று மதியம் எனக்கு கொரோனா இல்லை என பரிசோதனையில் முடிவாகியுள்ளது. கொரோனா என்னால் வெல்ல முடியும் என்று நம்பிக்கையுடன்சொன்னேன் அல்லவா! எனக்காகவும் என் குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. நானாவதி மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவருக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
துல்கர் சல்மான்…
கார்த்திக் பல…
Pongal Release:…
Sun serials:…
Veera Dheera…