அரும்பு மீசையில் செம க்யூட் அஜித்….35 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம்…

தமிழ் சினிமாவில் ‘அமராவதி’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் அஜித். அதன்பின் பல திரைப்படங்களில் சாக்லேட் பாயாக நடித்து கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து தற்போது லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்று தல அஜித்தாக மாறியுள்ளார். கடந்த 15 வருடங்களாகவே தன்னை அவர் ஒரு மாஸ் ஹீரோவாகவே சினிமாவில் அடையாளப்படுத்தி வருகிறார்.

Thala ajith

குறிப்பாக, அஜித் எந்த சினிமா பின்னணியும் இல்லாத குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்தவர். மோட்டார் மெக்கானிக் இன்ஜினியரிங் பட்டதாரி. அதனால், வீட்டில் ஏசி ரிப்பேர் என்றால் கூட அவரே கழட்டி சரி செய்து விடுவார். தற்போது அவருக்கு 50 வயது ஆகிறது. ஆனாலும், அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் அட்டகாசம் செய்து வருகிறார்.

Thala ajith

இவர் நடிக்கும் திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாவது முதல் படம் ரிலீஸ் ஆகும் நாள் வரை அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படம் எப்போது வெளியாகும் என ஒன்றரை வருடங்களுக்கும் மேல் அஜித் ரசிகர்கள் தவமாய் காத்துக் கிடக்கிறார்கள்.

Thala ajith

இந்நிலையில், 35 வருடங்களுக்கு முன்பு அதாவது 15 வயதில் அஜித் தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அரும்புமீசை, டக் இன் செய்யப்பட்ட முழுக்கை சட்டை, பேண்ட் என அப்போதே செம ஸ்டைலாகத்தான் அஜித் இருக்கிறார். இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Thala ajith

 

Published by
adminram