எங்க போனாலும் இதே வேலையா?... ரஷ்யா போயும் அடங்காத தல அஜித்....

by adminram |

9b8d1f73e7b1722c0ea7dfe7675ad3e9-1-3

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. இப்படம் ரசிகர்களிடையேயும், திரையுலக வட்டாரத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் துவக்கத்தில் துவங்கிய இப்படம் தற்போதுதான் முடிவுக்கு வந்துள்ளது. சென்னை, ஹைதராபாத் என படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் 10 நாட்களுக்கு முன்பு படக்குழு ரஷ்யா சென்றது. அங்கு பரபர ஆக்‌ஷன் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டது. இதோடு, வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக கூறப்படுகிறது. எனவே, தீபாவளிக்கு முன்பே இப்படம் வெளியாக வாய்ப்பிருப்பதாக கணிக்கப்படுகிறது.

f5287a532174338e9de5853d4690e75b
valimai

ஆனால், படப்பிடிப்பு படக்குழு சென்னை திரும்பிவிட்டாலும் முடிந்தாலும் அஜித் இன்னும் ரஷ்யாவில்தான் இருக்கிறார். மனுஷன் ஜாலியாக ஊர்சுற்றிக்கொண்டிருக்கிறார். அங்கு பல இடங்களில் நின்று அவர் எடுத்துக்கொணட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

b7d98f9443de17eaf9614e5baf689233
valimai

தற்போது இதன் பின்னணி தெரியவந்துள்ளது. அஜித் பைக் ரைட் அதாவது மோட்டார் சைக்கிளில் பல ஆயிரம் கிலோ மீட்டர் செல்வதில் ஆர்வம் உடையவர். வலிமை படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்த போது, அங்கிருந்து பைக்கிலேயே தனியாக சென்னை வந்தவர். மேலும், இடம் கிடைக்கும்போதெல்லாம் பைக்கை எடுத்துக்கொண்டு சில ஆயிரம் கிலோ மீட்டர் சென்று திரும்புவார். இது தொடர்பான பல புகைப்படங்கள் இதற்கு முன்பே வெளியானது.

25bca2f17121aa29435ca2ed2015361d-4
valimai

இந்நிலையில், ரஷ்யாவில் சுமார் 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பைக்கில் பயணம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளாராம். அதற்காக ரஷ்யாவில் பைக் பயணம் செய்யும் சிலரை சந்தித்து அவர் ஆலோசனையும் பெற்றுள்ளாராம். இது தொடர்பான புகைப்படங்கள்தான் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது. இன்னும் சில நாட்கள் ரஷ்யாவில் தங்கியிருந்து அவர் பைக் பயணத்தை முடித்துவிட்டு அவர் சென்னை திரும்புவார் எனத்தெரிகிறது.

Next Story