நடிகர் தல அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஏறக்குறைய முடிந்துவிட்டது. இன்னும் சில காட்சிகள் மட்டுமே பாக்கியுள்ளது.
நடிப்பது மட்டுமில்லாமல் பைக் ரேஸ், கார் ரேஸ், சிறிய ரக விமானங்களை உருவாக்குவது, ரிமோட் கண்ட்ரோலில் குட்டி விமானம் இயக்குவது, துப்பாக்கி சுடுதல் என பல விஷயங்களில் ஆர்வமுடையவர் அஜித். 2 வருடங்களுக்கு முன்பு கோவையில் நடைபெறும் தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு பரிசும் வென்றார்.
அதேபோல், படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வீட்டில் வைத்திருக்கும் காஸ்ட்லி பைக்கை எடுத்துக்கொண்டு மனுசன் ஊர் சுற்ற கிளம்பிவிடுவார். இதற்காக உலகில் விலை உயர்ந்த பைக்குகளை வாங்கி வீட்டில் வைத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பு வலிமை படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. அப்போது, அங்கிருந்து தனது பைக் மூலம் அவர் சென்னை வந்தார். தற்போது அது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி அஜித் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…
கடந்த 15…
பொங்கல் ரிலீஸாக…
நடிகர் ரஜினிகாந்த்…