நம்ம அஜித்தா இது?!.. நம்ப முடியாத அளவுக்கு ஃபிட்னஸ் காட்டுறாரே!.. வைரலாகும் போட்டோ!...

by சிவா |
ajithkumar
X

Ajithkumar: அஜித் பல கார் மற்றும் பைக் ரேஸ்களில் கலந்துகொண்டவர். அப்போது சில விபத்துக்கள் ஏற்பட்டு அவரின் முதுகு மற்றும் கால் பகுதிகளில் பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. அதனால் அதிக அளவு ஸ்டிராய்டு மாத்திரைகளை உட்கொண்டார். இதனால், அவரின் உடலின் எடை அடிக்கடி அதிகரிக்கும்.

அதனால்தான் ஒரு படத்திற்கு ஒரு படம் அவரின் தோற்றத்தில் நிறைய வித்தியாசம் இருக்கும். இதை வைத்து அவரை சிலர் பாடி ஷேமிங் பண்ணுவதும் தொடர்ந்து வருகிறது. இதற்கெல்லாம் அவர் பதில் சொல்வது இல்லை. வலிமை படம் வெளியான போது அஜித் ‘இந்த படத்தில் பஜன்லால் சேட்டு போல இருக்கிறார்’ என புளூசட்ட மாறன் கிண்டலடித்தார்.

ஆனால், அஜித்தின் உடல் எடை ஏன் அடிக்கடி அதிகரிக்கிறது என்பது அவரின் உடல்நிலையை பற்றி தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். அவ்வப்போது அஜித் தனது உடல் எடையை குறைத்து காட்டுவதும் உண்டு. பாலா இயக்கத்தில் நான் கடவுள் படத்தில் அவர் நடிப்பதாக இருந்தபோது உடலை பாதி குறைத்தார். ஆனால், அந்த படத்திலிருந்து அவர் விலகும் சூழ்நிலை ஏற்பட்டது.

அதன்பின் தொப்பையுடன் பல படங்களில் நடித்தார். திடீரென விவேகம் படத்தில் வொர்க் அவுட் எல்லாம் செய்து சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து காட்டினார். விடாமுயற்சி படத்தில் நடித்தபோது கூட கொஞ்சம் குண்டாகவே இருந்தார். ஆனால், அந்த படம் முடியும் நேரத்தில் ஒல்லியான தோற்றத்துக்கு மாறினார்.

அது குட் பேட் அக்லி படத்திற்காக என எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், அதில் உண்மை இல்லை. பல நாடுகளிலும் நடக்கும் கார் ரேஸ்களில் தொடந்து 10 மாதங்கள் கலந்துகொள்ளவிருக்கிறார். அந்த போட்டியில் கலந்துகொள்ள உடலின் எடை இவ்வளவுதான் இருக்க வேண்டும் என ஒரு விதிமுறை இருக்கிறது.

அதற்காகத்தான் அஜித் சிரமப்பட்டு உடல் எடையை குறைத்துள்ளார். கடந்த 2 மாதங்களில் அது தொடர்பான பல புகைப்படங்களும், வீடியோக்களும் தொடர்ந்து வெளியாகி வந்தது. இந்நிலையில்தான், மீண்டும் உடலை குறைத்து அவர் போஸ் கொடுத்துள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படத்தை பார்த்த பலரும் இது அஜித்தா என ஆச்சர்யப்பட்டு வருகிறார்கள்.

Next Story